July 30, 2026

Seithi Saral

Tamil News Channel

மண் பரிசோதனை பற்றி விழிப்புணர்வு செய்த மாணவிகள்

1 min read

Students raised awareness about soil testing

30.7.2026
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், கலசலிங்கம் பல்கலைக்கழக வேளாண்மைக் கல்லூரியின் இறுதியாண்டு வேளாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

கிராம ஊராட்சித் தலைவர் ராம்குமார், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், கலசலிங்கம் வேளாண் கல்லூரி இறுதியாண்டு , மாணவிகள் பத்மஸ்ரீ ஜோதி.ச. கமலேஸ்வரி.அ. அபர்ணா தேவி.ரா. பிரியதர்ஷினி.பூ, யாழினி.த. ஞானமதி.கு ஆகியோர் கலந்து கொண்டு, மண் பரிசோதனை குறித்த பல்வேறு பயனுள்ள தகவல்களை எடுத்துரைத்தனர்.

மேலும் மண் பரிசோதனையின் அவசியம், அதன் நோக்கங்கள், மண் மாதிரி எடுக்க ஏற்ற காலம், மண் மாதிரி எடுக்க வேண்டிய மற்றும் எடுக்கக் கூடாத இடங்கள் குறித்தும் வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கமளித்தனர்.

மேலும் விளக்கப்படங்கள் வரைபடங்களின் உதவியுடன், மண் மாதிரி எடுக்கும் படியான செயல்முறையை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மண் மாதிரி எடுப்பதற்குப் பயன்படுத்தப் படும் மண்வெட்டி, கடப்பாரை, மண் மாதிரி சேகரிப்பு குழாய் வாளி மற்றும் மாதிரி சேகரிப்பு பை உள்ளிட்ட கருவிகள், அவற்றின் பயன்பாடு மற்றும் சரியான முறையில் பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கினர்.

மண் பரிசோதனையின் மூலம் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை துல்லியமாக அறிந்து, உரங்கள் மற்றும் இயற்கை உரங்களை தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் தேவையற்ற செலவினங்களை குறைக்கலாம், மண் வளத்தை பாதுகாக்கலாம், பயிர் வளர்ச்சி, மகசூல் மற்றும் விளைபொருளின் தரத்தை
மேம்படுத்தலாம் என்பதையும் எடுத்துரைத்தனர்.

மேலும், மண் மாதிரியை அரசு மண் பரிசோதனை ஆய்வகங்கள் அல்லது அருகிலுள்ள வேளாண்மை அலுவலகங்களில் சமர்ப்பிக்கும் முறை, 7 முதல் 15 நாட்களுக்குள் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் என்பது, அந்த அறிக்கையில் மண்ணின் காரம் மற்றும் அமிலத் தன்மை , மின் கடத்துத்திறன் கரிம கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் போன்ற விவரங்கள் இடம்பெறும் என்பதையும் விளக்கினர்.

அந்த முடிவுகளின் அடிப்படையில் உர மேலாண்மையை மேற்கொள்வதன் மூலம் மண் வளத்தை மேம்படுத்தி, அதிக மகசூலுடன் தரமான விளைபொருட்களைப் பெற முடியும் என தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில், மண் பரிசோதனை பொதுமக்களின் தொடர்பான சந்தேகங்களுக்கு மாணவிகள் விளக்கம் அளித்ததுடன், விவசாயிகள் அரசு மண் பரிசோதனை சேவைகளை முழுமையாகப் பயன்படுத்தி அறிவியல் அடிப்படையிலான
சாகுபடி முறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினர். முடிவில்
கலசலிங்கம் வேளாண் கல்லூரி இறுதியாண்டு , மாணவிகள் பத்மஸ்ரீ ச.ஜோதி.
அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *