குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடங்குகிறது
1 min read
The Courtallam Drizzle Festival begins tomorrow
30.7.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை( 31.07.2026) முதல் 4.8.2026 வரை நடைபெற உள்ளது.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் துவங்குகிறது. அதன்படி துவக்க விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் தமிழ்த்தாய் வாழ்த்து, அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் மா. வீராசாமி அனைவரையும் வரவேற்று பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் தலைமை தாங்குகிறார். அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் சுற்றுலா பண்பாட்டு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை டாக்டர் எஸ் ஸ்வர்ணா, சுற்றுலாத்துறை தொல்லியல் துறை இயக்குனர் வி பா ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ் ராஜேஷ்குமார் சிறப்புரை ஆற்றுகிறார். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி கே ராஜு விழா பேருரை ஆற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலை கதிரவன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திலீபன் ஜெய்சங்கர், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச். மனோஜ் பாண்டியன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன்,
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு. அசோக்குமார், தென்காசி சாரார் ஆட்சியர் வைஷ்ணவி பால், மாவட்ட வன அலுவலர் முனைவர் ராஜ்மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சுலைமான் சேட்,மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.கிருஷ்ணன் குற்றாலம் பேரூராட்சி மன்ற தலைவர் மூ.கணேஷ் தாமோதரன், குற்றாலம் பேரூராட்சி துணைத் தலைவர் தங்கபாண்டியன், ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர் முடிவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் நித்திய கல்யாணி அனைவருக்கும் நன்றி கூறுகிறார்.
முன்னதாக பிற்பகல் ஒரு மணிக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவ மாணவிகளின் பல் சுவை நிகழ்ச்சி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சு.அசோக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். பிற்பகல் 3 மணிக்கு மங்கல இசை, பிற்பகல் 3:30 மணிக்கு சுற்றுலாத்துறை சார்பில் கிளாரினட் இசை நிகழ்ச்சியும்,
மாலை 04 மணிக்கு சுற்றுலாத் துறை சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு தென்னக பண்பாட்டு மையம் சார்பில் பறை இசை, மாலை 06 மணிக்கு தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சாக்சபோன், மாலை 06.30 மணிக்கு கலை பண்பாட்டு துறை சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சியும்,
இரவு 07:00 மணிக்கு தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கிராமிய பல் சுவை நிகழ்ச்சி இரவு 08 மணிக்கு சுற்றுலாத்துறை சார்பில் கலந்து ஜெயராம் வழங்கும் ஆனந்த ராகம் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் பரிசுகளை வழங்கி பாராட்டுகிறார். இந்த நிகழ்ச்சிகளை இடைநிலை கல்வி பள்ளி துணை ஆய்வாளர் பா. சசிகுமார் தொகுத்து வழங்குகிறார். இத்துடன் முதல் நாள் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. ஆனாலும் 04.08.2026 வரை சாரல் திருவிழா தொடர்ந்து நடைபெற உள்ளது இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் ரஜ்ஜீத்சிங் அழைப்பு விடுத்துள்ளார்.