கால்நடை விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான கண்டுணர்வு சுற்றுலா
1 min read
District-level exposure visit for livestock farmers
31.7.2026
தென்காசி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலான்மை முகமையின் கீழ் இலாபகரமான முறையில் கறவை மாடுகள் வளர்ப்பு, வெள்ளாடு, செம்மறி ஆடு மற்றும் கோழி வளர்ப்பு முறைகள் என்ற தலைப்பில் தென்காசி வட்டார விவசாயிகளை கடையநல்லூர் வேளாண் அறிவியல் மைத்திற்கு உள் மாவட்ட அளவிலான விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் கண்டுணர்வு சுற்றுலாவில் கால்நடை உதவி மருத்துவர் கனகராஜ் அவர்கள் பரன்மேல் ஆடு வளர்ப்பு முறையை விவசாயிகளுக்கு காண்பித்து கொட்கை அமைப்பு முறையினை விளக்கி கூறி பின்னர் பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு முறைகள் மற்றும் கோழி வளர்ப்பு முறைகளையும் பற்றி எடுத்து கூறினார். வேளாண்மை அறிவியல் மையம் தொழில்நுட்ப வல்லூநர் பாலசுப்பிரமணியன் ஒருங்கிணைந்த பண்ணையம் செயல்பாடுகள் மற்றும் பண்ணை அமைக்கும் முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார்.
பின்னர் வேளாண்மை அறிவியல் மையம் தொழில்நுட்ப வல்லூநர் ரூமானா பிஸ்மி அவர்கள் கால்நடை விவசாயிகளுக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி பற்றி எடுத்து கூறினார். பயிற்சியின் இறுதியாக உதவி தொழில்நுட்ப மேலாளர் திருமலைப்பாண்டியன் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். பயிற்சிக்கு தேவையான ஏற்பாடு பணிகளை உதவிதொழில்நுட்ப மேலாளர்கள் திருமலைப்பாண்டியன் மற்றும் டாங்கை ஆகியோர் செய்திருந்தனர்.