கேரளாவிலிருந்து கஞ்சா கடத்தி கடையத்தில் விற்பனை-ஒருவர் கைது
1 min read
One arrested for smuggling cannabis from Kerala and selling it in Kadayam.
3.8.2026
கேரளாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து கடையத்தில் விற்பனை செய்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடையம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மாதாபுரத்தில் காவல் துணை ஆய்வாளர் மாடசாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கடப்போகத்தியை சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்பவரது இருசக்கர வாகனத்தில் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப் பொருளான கஞ்சா பிடிப்பட்டது.
பிடிபட்ட கார்த்திக்கை விசாரித்ததில் சடையப்பபுரம் மகேஷ் (வயது 28) என்பவருடன் சேர்ந்து கேரளாவிலிருந்து மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் போதைப் பொருளான கஞ்சாவை கடத்தி வந்து பல இடங்களில் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையிலடைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான மகேஷ் தலைமறைவாகி விட்டார்.
கடையம் காவல் துணை ஆய்வாளர் மாடசாமி தலைமையில் தலைமறைவான மகேஷை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், கஞ்சா விற்பனையில் இவர்களோடு தொடர்புடையவர்கள் மற்றும் விற்கப்படும் இடங்கள் குறித்தும் காவல் துணை ஆய்வாளர் மாடசாமி விசாரித்து வருகின்றார்.
-ஜோசப், நிருபர்