September 21, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி கருட சேவையை 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

1 min read

200,000 devotees witness the Tirupati Garuda Seva.

20.9.2026
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா முக்கிய நிகழ்வான தங்க கருட வாகன சேவை சனிக்கிழமை நடந்தது. அன்று மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் பவனி வந்தார்.

கருட சேவையை காண 190 மண்டபங்களில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கருட வாகன சேவை முன்பாக மங்கள வாத்தியங்கள் முழங்க குதிரைகள், யானைகள் அணிவகுத்து சென்றன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

கருட வாகனத்தில் ஏழுமலையான் பவனி வந்ததை கண்ட பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர்.

பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று காலை ஏழுமலையான் அனுமந்த வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு யானை வாகனத்திலும் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதியில் சனிக்கிழமை 83,589 பேர் தரிசனம் செய்தனர். 27 828 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.17 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 4.77 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *