August 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

1 min read

Tenkasi: Collector advises widows and destitute women to register with the Welfare Board.

7.8.2026
தென்காசி மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூகநலம் (ம) மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் சென்னை-05, கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், வறுமைகோட்டிற்குகீழ் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் உள்ளவர்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் tnwidowwelfareboard.tn.gov.in-என்ற இணையதள முகவரியில் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களான பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று, விதவை சான்று, குடும்ப அட்டை, அலைபேசி எண் உள்ளிட்ட தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *