தென்காசி: தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
1 min read
Tenkasi: Deadline extended for student admission to Industrial Training Institutes.
7/8/2026
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை 31.07.2026 உடன் நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி நேரடிச் சேர்க்கை செய்வதற்கான கால அவகாசம் 14.08.2026 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவான பொருத்துநர், மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவான (பம்ப்மெக்கானிக்) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன. மேலும் தொழிற்நுட்பமையம் 4.0 திட்டத்தின்கீழ், ஈராண்டு தொழிற்பிரிவுகளான (மேம்படுத்தப்பட்ட சிஎன்சி இயந்திர தொழிற் நுட்பவல்லுநர் கம்மியர் மின்சார வாகனம்), மற்றும் (தொழிற்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பவல்லுநர்) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க 10-ஆம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ். ஆதார்அட்டை பாஸ்போர்ட்சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் கடையநல்லூர், வீரகேரளம்புதூர் மற்றும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்திற்கு நேரில் அணுகவும். பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம்ரூ.750/- விலையில்லா மடிக்கணினி மிதிவண்டி, சீருடைகள், தையல்கூலி, மூடுகாலணிகள், பாடப்புத்தககங்கள். வரைபடகருவிகள், பஸ்பாஸ், சலுகைகட்டண ரெயில்பாஸ், ஆகியன வழங்கப்படும். மேலும் உணவு வசதியுடன் கூடிய விடுதிவசதி உண்டு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண்திட்டத்தின் மூலமும், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலமும் உதவித்தொகை பெற்று வழங்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு. கடையநல்லூர்-04633-290270, 9499055801, 9499055800, -04633-210962, 9944055798, 9487986493, மாவட்டதிறன்பயிற்சி அலுவலகம்-04633-298088 ஆகிய தொலைபேசி எண்களிலும், முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர், வீரகேரளம்புதூர், மற்றும் மாவட்ட திறன் பயிற்சிஅலுவலகம், தென்காசி ஆகிய முகவரிகளில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். தெரிவித்துள்ளார்.