August 8, 2026

Seithi Saral

Tamil News Channel

ரேஷன் கடைகளில் 8,9-ந் தேதிகளில் குடும்ப அட்டை கைரேகை சரிபார்ப்பு சிறப்பு முகாம்

1 min read

Special camp for family card fingerprint verification at ration shops on the 8th and 9th.

7.8.2026
தமிழகத்தில் அனைத்து நியாய விலை கடைகளிலும் இதுவரை இகேஒய்சி பதிவு செய்யாத அல்லது விடுபட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேரில் வந்து கைரேகை பதிவு செய்து 100% மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்யுமாறு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்.2013 ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.86% eKYC பணியானது மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாட்களில் தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆகவே, நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் பதிவு செய்ய வருகின்ற 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *