பரமக்குடி பெண் நெசவாளர் நெய்த காட்டன் ரக சேலைக்கு முதல் பரிசு- முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min read
First prize awarded to a cotton saree woven by a female weaver from Paramakudi – Chief Minister Joseph Vijay presented the award.
10/8/2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எமனேஸ்வரம் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பல ஆயிரம் பேர் கைத்தறி நெசவு செய்கின்றனர். இவர்கள் காட்டன் சேலை ரகங்கள் நெய்வதில் மிகவும் கை தேர்ந்தவர்கள்.
ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு தேசிய கைத்தறி தின நாளன்று காட்டன் சேலைக்கு முதல் பரிசு ரூ.5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ 3 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.ஒரு லட்சம் வழங்கி வருகிறது.
இதையடுத்து 2025-2026 ஆம் ஆண்டிற்கான பருத்தி ரக பிரிவில் சிறந்த நெசவாளர் விருது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சரக எமனேசுவரம் ஆர்.ஹெச்.45 முருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 63 வயதான நாகலம்மாள் பெற்றுள்ளார்.
சென்னையில் நடந்த கைத்தறி தினவிழாவில் தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் எமனேசுவரம் பெண் நெசவாளர் நாகலம்மாளுக்கு முதல் பரிசு ரூ 5 லட்சம் மற்றும் சிறந்த நெசவாளர் விருது வழங்கி பாராட்டினார்.

மாநில அளவில் முதல் பரிசு பெற்ற நாகலம்மாள் தொடர்ந்து 33 ஆண்டுகளாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவர் நெய்த காட்டன் சேலை நெய்ய 120 வாசிகள் ஜக்காட் பெட்டி பயன்படுத்தப் பட்டுள்ளது.
மேலும் 6.20 மீ.நீள முள்ள இந்த சேலையை உற்பத்தி செய்ய ஆயிரம் 10 முறை கை மற்றும் கால்களை ஒரு சேர அசைத்து நெய்துள்ளார். சேலை முந்தியில் கடல் அலை மற்றும் ஒளிக் கீற்று சிதறுவது போல் தோற்றம் பெற்றுள்ளது. மேலும் 6.20 மீ.
நீளமுள்ள இந்த சேலையை உற்பத்தி செய்ய ஆயிரம் 10 முறை உடல் முழுதும் மின்காந்த அலைகள் போல் நெருக்கமான கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
சேலையின் பார்டரில் நான்கு புறமும் ஒளிக்கீற்று ஒருமுகப் படுத்துவது போன்ற கட்டம் மற்றும் வாழைப்பூ கட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. வெள்ளைப் பாவு, ககுப்பு அரக்கு கலரில் பார்டர் நெய்யப்
பட்டுள்ளது.சேலை முந்தி 420 கொல்கி, கருப்பு லைன் புட்டா கொடுக்கப் பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 80க்கு 40 கோமுடு காட்டன் நுால், 2க்கு 100 கோமுடு மெசரஸ் காட்டன் நூல் பயன் படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.