சங்கரன்கோவில்: வாகனத்தில் 1500 கிலோ ரேசன் அரிசி கடத்தியவர் கைது
1 min read
Sankarankovil: Person arrested for smuggling 1,500 kg of ration rice in a vehicle.
9.8.2026
தென்காசி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் வேல் முருகன், மற்றும் போலீசார் நேற்று அதிகாலையில் சங்கரன்கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இலவன்குளம் அருகே சந்தேகிக்கும் வகையில் வந்த டாடா சுமோ வாகனத்தை மறித்து சோதனை செய்ததில் அரசு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1500 கிலோ ரேசன் அரிசியை கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது.
தென்காசி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் வேல் முருகன், மற்றும் போலீசார் உடனடியாக
ரேஷன் அரிசியினை பறிமுதல் செய்து வாகனத்தை ஓட்டி வந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
இதில் 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் அதனைக் கடத்துவதற்கு பயன்படுத்திய டாடா சுமோ வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.