சங்கரன்கோவிலில் கடைகளுக்கு பயன்படுத்திய வீட்டு சிலிண்டர்கள் பறிமுதல்
1 min read
Domestic LPG cylinders used for commercial purposes seized in Sankarankovil
13.9.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வீட்டு சிலிண்டர்களை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்திய பிரபல ஸ்வீட் பேக்கரியில் இருந்து நான்கு சிலிண்டர்கள், மற்றொரு ஓட்டலில் இருந்து மூன்று சிலிண்டர்கள் உட்பட ஏழு சிலிண்டர்களை வட்டாட்சியர் பாபு தலைமையில் பறிமுதல் செய்தனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பல்வேறு ஒட்டல் மற்றும் ஸ்வீட் பேக்கரிகளில் வீட்டு சிலிண்டர்கள் பயன்படுத்தப் பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியதலைவர் ரஞ்ஜீத்சிங் கவனத்திற்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக சங்கரன்கோவில் வட்டாட்சியர் பாபு தலைமையில் சங்கரன்கோவிலில் உள்ள பல்வேறு ஓட்டல்கள் மற்றும் ஸ்வீட் பேக்கரிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்…
இந்நிலையில் திருவேங்கடம் சாலையில் உள்ள பிரபலமான
ஸ்வீட் பேக்கரியில் வட்டாச்சியர் பாபு தலைமையில் சோதனை
செய்த போது வீட்டு சிலிண்டர்களை பயன்படுத்தி வந்தனர்.
இதனையடுத்து நான்கு சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்…
தொடர்ந்து வடக்குரதவீதியில் சோதனை செய்த போது சுக்குகாபி
மற்றும் வடை விற்பனை செய்து வந்த கடையில் மூன்று வீட்டு
சிலிண்டர்களை பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றையும்
பறிமுதல் செய்தனர்….
ஏழு சிலிண்டர்களை பறிமுதல் செய்த வட்டாச்சியர் பாபு
தலைமையிலான வருவாய்த்துறையினர் அத்தியவாசிய
பொருட்கள் கடத்தல் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
இந்த அதிரடி சோதனையில் வருவாய் ஆய்வாளர்கள் கணேசன்,
அருண்குமார், முத்துக்குமார், தலையாரி செந்தில்குமார்
ஆகியோர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.