கடையத்தில் பாஜக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
1 min read
Farmers’ association stages protest in Kadayam condemning the BJP government.
13.8.2026
தென்காசி மாவட்டம், கடையத்தில் பாஜக அரசை கண்டித்தும் 11 கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
விவசாயி விவசாய தொழிலாளர், மாதர் தொழிலாளர், வாலிபர், மாணவ, ஆட்டோ தொழிலாளர் ஆகிய சங்கங்கள் இணைந்து தமிழகம் முழுவதும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மறியல் போராட்டத்தை நடத்தியது.
இதன் ஒரு பகுதியாக கடையம் வட்டார அனைத்து சங்கங்களின் கடையம் ஒன்றிய குழு சார்பாக பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் கடையம் ஒன்றிய சிபிஐ(எம்) செயலாளர் மேனகா விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் காந்தி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பட்டாசு பாலு, முத்துராமலிங்கம், சிஐடியு நிர்வாகிகள் சிலம்பரசன், விமல்ராஜ், முருகன், சேர்மசெல்வன், முப்புடாதி மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.