August 14, 2026

Seithi Saral

Tamil News Channel

ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை- மோடி வெளியிட்டார்

1 min read

Ram Nath Kovind’s biography – Modi releases it.

13.8.2026
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை வெளியிடும் விழா டெல்லியில் நடந்தது. ‘இந்திய குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டு இருக்கும் அந்த சுயசரிதையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசும்போது இளைஞர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை அவர் வழங்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தலைவர்களின் சுயசரிதைகளை இளைஞர்கள் வாசிக்க வேண்டும். இதன் மூலம் தங்கள் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

இன்று, ‘ரீல்ஸ்’களின் சகாப்தம். சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் உங்களை எங்கோ ஈர்க்கிறார்கள். ஆனால் இந்த தலைமுறையில் கூட ரெயில் நிலையங்களில் என்ன எழுதியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறுக்குவழி உங்களை முடக்கி விடும். ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை இந்திய ஜனநாயகத்தின் ஒரு பாரம்பரிய சின்னமாக மாறும். புதிய தலைமுறை அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளது.

எதிர்காலத்தில் அவரை போன்ற இன்னும் பல இளைஞர்கள் நமக்கு தேவை. சூழ்நிலைகளால் தோற்கடிக்கப்படாமல், ஒவ்வொரு சவாலையும் வெல்லும் உறுதியை கொண்டவர்கள் தற்சார்பு இந்தியாவுக்கு வழி வகுப்பார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும் போது, தனது குழந்தைப்பருவ துயரங்கள் உள்ளிட்ட பல்வேறு அனுப வங்களை பகிர்ந்து கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *