சிவகிரி வட்டத்தில் 19-ந் தேதி”உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்”
1 min read
“Bringing Services to Your Doorstep” scheme in Sivagiri Taluk on the 19th.
14.8.2026
”உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” என்ற திட்டத்தின் படி, தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் ” இந்த நிதியாண்டில், இரண்டாம் கட்டமாக 19.08.2026 புதன்கிழமை அன்று முற்பகல் 9.00 மணி முதல் 20.08.2026 வியாழக்கிழமை முற்பகல் 9.00 மணி வரை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தலைமையின் கீழ் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
எனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களும் 19.08.2026 புதன்கிழமை அன்று முற்பகல் 9.00 மணிமுதல் , சிவகிரி வட்டத்தில் அரசால் நிறைவேற்றப்பட்டு வரும், அனைத்து துறை சார்ந்த முக்கியமான திட்டங்கள், அரசு அலுவலகங்கள், பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளனர். அன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சீத்சிங் பிற்பகல் 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவகிரி வட்டம், சிவகிரி பேரூராட்சியில் உள்ள தேவர் மகா சபை திருமண மண்டபத்தில் வைத்து பொதுமக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தும், கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அதனை கேட்டு நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படவுள்ளன.
மேலும் அன்றைய தினம் தொடர்ந்து மாலை 6.00 மணி முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களுடன் பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று திட்டப்பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, அன்று இரவு சிவகிரி வட்டத்தில் தங்க உள்ளனர். பின்னர் மறுநாள் காலை 20.08.2026 காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை சிவகிரி வட்டத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கு சென்று அனைத்து துறை சார்ந்த பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் ஆய்வு செய்ய உள்ளனர்.
எனவே சிவகிரி வட்டத்திலுள்ள பொது மக்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்களிடம் தங்களது பகுதிக்கு தேவைப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றையும், தங்களது பகுதிகளிலுள்ள குறைகளையும் நேரில் தெரிவித்து அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.