August 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி ரயில்நிலையத்தில் இருப்புப் பாதை போலீசார் தீவிர சோதனை

1 min read

Railway police conduct intensive checks at Tenkasi railway station

14.8.2026
இந்திய திருநாட்டின் 80 வதுசுதந்திர திருநாளை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக தென்காசி ரயில் நிலையத்தில், திருச்சி மாவட்ட இருப்பு பாதை காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி உட்கோட்டை இருப்பு பாதை காவல் துணை கண்காணிப்பாளர், மற்றும் திருநெல்வேலி இருப்பு பாதை காவல் ஆய்வாளர் ஆகியோரின் உத்தரவுப்படி தென்காசி இருப்பு பாதை காவல்துறையினர் தென்காசி ரயில்நிலையத்திற்கு வந்த பயணிகள் கொண்டு வந்த சூட்கேஸ்,பேக், மற்றும் பைகளையும், வாகனங்களையும், பொருள் பாதுகாப்பு அறையும் தணிக்கை செய்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த சோதனையில் தென்காசி இருப்புபாதை காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

ரயில் பயணிகளிடம் இருப்பு பாதை காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையால் அங்கு வந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *