ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி பாதுகாப்பு பணியில் 1100 போலீசார்
1 min read
1,100 police personnel deployed for security duty on the occasion of Ondiveeran’s memorial day
14.8.2026
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் 20.08.2026 அன்று சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255 வது நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட உள்ளனர்.
இந்நிலையில் நெல்கட்டும்செவல் பகுதிக்கு வருகை தந்த நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு, தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோக்குமாரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் வரும் 20.08.2026 அன்று சுதந்திரப்போராட்ட வீரர் ஒன்டிவீரனின் 255வது நினைவு தினம் அனுசரிக்கப் படுகிறது.
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255 வது
நினைவுதின விழாவிற்கு வரக்கூடியவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் ஆய்வளாரால் வழங்கப்படும் பாஸ் பெற வேண்டும். அதன் பின்னர் காவல்துறையினர் பாதுகாப்போடு அவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.
சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி 1100 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட உள்ளனர். மேலும் கிராமங்களில் சர்ச்சைக்குரிய சந்தேகப்படும் நபர்கள் பற்றி உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும், அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க உள்ளோம்.
இந்த நிகழ்ச்சியை அமைதியாகவும் சிறப்பாகவும் நடத்த பொதுமக்கள் அனைவரும் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.