August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

காவிரி பிரச்சினையில் நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்; மாநாட்டில் முதல்வர் விஜய் பேச்சு

1 min read

The court verdict on the Cauvery issue must be respected; Chief Minister Vijay speaks at the conference.

20.8.2026
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும் என முதல்வர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை கோவளத்தில் நடந்த தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியதாவது:
மாநிலங்கள் இடையே உளவுத்தகவல்கள் பரிமாற்றத்தின் மூலம் போதைப்பொருள் ஒழிக்க பயனாக அமையும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும்.
உரிய நதி நீரை பங்கிடாமல், காவிரி விவகாரத்தில் ஒத்துழைப்புக்கு வாய்ப்பில்லை.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை, விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நீர் அடிப்படையானது. எனவே, மாநிலங்களுக்கு இடையேயான நதிகள் சட்டபூர்வமாகவும் முழு ஒத்துழைப்புடனும் நிர்வகிக்கப்பட வேண்டும்.
கடல்வழிப் போக்குவரத்து, மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம்.
12ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற, ஏறை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோல் மற்றும் மதுபானங்களைத் தவிர, வேறு எதிலும் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றம் செய்து கொள்ளும் வருவாய் ஆதாரங்கள் கிட்டத்தட்ட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிணைந்து வரி விகிதங்களை நிர்ணயிப்பதில் மாநிலங்களுக்கான அந்த சுதந்திரத்தை மீண்டும் பெற வேண்டும்.

கர்நாடகாவின் பொம்மசந்திரா முதல் தமிழகத்தின் ஓசூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க வேண்டும்; மாநிலங்களின் நிதி தன்னாட்சியை மதிக்க வேண்டும்.
லோக்சபாவில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாததை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்.
முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *