August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

கடற்கொள்ளையர்கள் தாக்குதல்; மேலும் ஒரு மீனவர் உயிரிழப்பு

1 min read

Pirate attack; another fisherman loses his life.

20/8/2026
ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற மீனவர் சங்கர் இன்று உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா தொடுவாய் சுனாமி நகர் காந்தி தெரு பக்ரிசாமி மகன் மாவீரன்.40, கீழமூவர்கரை கோவிந்தசாமி மகன் சங்கர்.39, திருமுல்லைவாசல் சாமிதுரை மகன் பால்ராஜ், கடலூர் மாவட்டம் சொத்திகுப்பம் மணிகண்டன் ஆகியோர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர்.

கடந்த 10ம் தேதி இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள் மாவீரன் உள்ளிட்டோர் சென்ற படகில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனால் இரு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஈரானிய கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயம் அடைந்த மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் படுகாயம் அடைந்த சங்கர் சவுதி அரேபியா ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

லேசான காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சைக்கு பின் இருப்பிடம் திரும்பினர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார். இது குறித்த தகவல் அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த சங்கருக்கு அமுதா என்ற மனைவியும் ஒரு மசலும் ஒரு மகளும் உள்ளனர். மாவீரன் மற்றும் சங்கர் ஈரான் கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொடுவாய் மாவீரன் கீழமூவர்கரை சங்கர் ஆகிய இருவரின் உடல்களை சொந்த ஊர் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தார் உறவினர்கள் மற்றும் மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *