August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

வருகிற 28-ந் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டம்

1 min read

filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 0; shaking: 0.009271; highlight: 1; motionR: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0012,0.0003; brp_del_sen: 0.1000,0.1000; delta:1; bokeh:1; ispap:1; papproctime: 2026:08:21 13:12:30; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 262.06686;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather:null, icon:null, weatherInfo:100;temperature: 39;zeissColor: bright;

TASMAC employees to stage a shop-closure protest on the 28th.

21.8.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 28ந்தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் 100 சதவீதம் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் வருகிற 28ந்தேதி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட டாஸ்மாக் கூட்டுக்குழு தலைவர் ராம்ராஜ் தலைமை தாங்கினார். விற்பனையாளர் சங்க தலைவர் சாமி முன்னிலை வகித்தார். கூட்டுக்குழு செயலாளர் சரவணபெருமாள், தொ.மு.க.சங்கம் சந்திரன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

இந்த கூட்டத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங் களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற 28ந்தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் 114 டாஸ்மாக் மதுக்கடைகளை அடைத்து 100 சதவீதம் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் தொழிற் சங்க நிர்வாகிகள் சாஸ்தா, குமார், ராஜாராம், கைக்கொண்டான், சௌந்தர், ராமசாமி மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கெண்டனர். முடிவில் ராமகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *