August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில்: மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள்

1 min read

Sankarankovil: Assistive devices for differently-abled students

21/8/2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர் களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

வட்டார வள ஒருங்கிணைப்பாளர் செந்தாமரைக்கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். வட்டார வள மேற்பார்வையாளர் பிரதாப் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் உதவி உபகரணங்கள் குறித்தும்,பாதுகாப்பு குறித்தும் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், நடை பயில்வதற்காக ரொலேட்டர், மடக்கு நாற்காலி மற்றும் குழந்தைகளின் கால்களை வலுப்படுத்தவும், நிற்கவும் உதவிகரமாக காலிப்பர் ஆகிய 44 உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர் பாக்கியலட்சுமி,
கலைச்செல்வி, ஆனந்தஜோதி, சிவகுமார், முத்து (எ)சீதாலட்சுமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *