August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

த.வெ.க. சார்பில் ஒண்டிவீரன் நினைவு தினம்

1 min read

Observance of Ondiveeran’s Memorial Day by Tamizhaga Vettri Kazhagam

21.8.2026
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் நெல்கட்டும் சேவல் பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். எஸ்.முருகன், ரெட்டியார்பட்டி நாராயணன், தமிழக வெற்றிக் கழக தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன், மேற்கு மாவட்ட செயலாளர் நியாஸ், தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தூணிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் வாசுதேவநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர்
குருசாமி மற்றும்
தமிழக வெற்றிக் கழக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *