மாணவிகளுக்கு இலவச சிம்கார்டு வழங்கும் விழா
1 min read
Event for distributing free SIM cards to female students
21.8.2026
நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சிவகாசி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் புது தில்லிக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்TRAI ஆகியவை இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் மகாலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவிற்கு தலைமை வகித்த நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் எஸ். சுப்பிரமணியம் பேசுகையில் நுகர்வோருக்குஉரிய எட்டு உரிமைகள் மற்றும் கடமைகள் நுகர்வோர் எந்த பொருள் வாங்கினாலும் ஏன் பில் வாங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நுகர்வோர் எவ்வாறு நிவாரணம் பெறுவது என்பது பற்றி விளக்கமாக கூறினார்.
நுகர்வோர் குறை தீர்வு ஆணைய உறுப்பினர் முனைவர் பாக்கியலட்சுமி பேசுகையில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளிப்பது எப்படி என்றும் அளிக்கப்பட்ட புகாருக்கு கிடைக்கும் நிவாரணம் பற்றியும் எடுத்துரைத்தார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பால் துரை பேசுகையில் மாணவிகள் 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றி கண்டிப்பாக அறிந்து இருக்க வேண்டும் என்றும் ரேஷன் கடைகளில் ரேகை வைக்காத நுகர்வோர்கள் கண்டிப்பாக அருகில் உள்ள ரேஷன் கடைகளில் சென்று ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
பி எஸ் என் எல் கூடுதல் பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் இந்திரா ஆகியோர் பேசுகையில் தொலைத்தொடர்பில் நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறியதோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 220 மாணவிகளுக்கும் பிஎஸ்என்எல் இலவச சிம் கார்டு வழங்கினார்கள்.
கல்லூரி நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மகேஸ்வரி நன்றி உரையுடன் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிறைவு பெற்றது.