எம்எல்ஏக்களுக்கு கார் சொந்தமாக வழங்கப்படாது: அமைச்சர் ராஜ்மோகன்
1 min read
Cars will not be provided to MLAs for personal ownership: Minister Rajmohan
22.8.2026
எம்எல்ஏக்களுக்கு கார் சொந்தமாக வழங்கப்படாது. 5 ஆண்டுகள் பயன்படுத்துவதற்காகவே வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறி உள்ளார்.
அப்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;-
இங்கு எல்லோரும் காரை பற்றியே மீண்டும், மீண்டும் பேசினார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் ஒரு விளக்கம் கொடுத்து விடுகிறேன். கார் ஒன்றும் சொந்தமாக யாருக்கும் கிடையாது, 5 ஆண்டுகளுக்கு பயன்பாட்டுக்கு மட்டும்தான்.
ஆனால் திட்டம் என்பது அதன் வேர் வரை, மக்களின் முழுமையான வாழ்வாதாரம் வரை செல்லும். அது திரும்ப வராது. கார் திரும்ப வந்துவிடும்.
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.