August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி பகுதியில் வாழை இலை விலை உயர்வு – ஒரு கட்டு வாழை ரூ.3,000க்கு விற்பனை

1 min read

Rise in banana leaf prices in the Tenkasi region – a bundle sold for Rs3,000.

22/8/2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஓணம் பணடிகை மற்றும் திருமண முகூர்த்தம் நாளை முன்னிட்டு வாழை இலை விலை கிடுகிடுவென உயர்ந்து ரூபாய் 3000 க்கு விற்பனை ஆகிறது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்மன் சன்னதி தெருவில் இயங்கி வரும் மொத்த வாழை மார்க்கெட்டிற்கு மீன் துள்ளி, புதுக்குளம், கொக்கு குளம் சிவகாமியாபுரம், பெருங்கோட்டூர், குருக்கள்பட்டி, பெரியசாமியாபுரம், நடவக்குறிச்சி ஈச்சந்தா பெரியசாமியாபுரம், ஆண்டார்குளம், குலசேகரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் வாழை இலை கட்டுகளை விற்பனைக்காக தங்கள் தோட்டத்தில் இருந்து கொண்டு வருகிறார்கள். இதில் நாட்டு இலை அளவில் சிறியதாகவும் அளவில் பெரியதாகவும் விற்பனைக்கு வந்துள்ளது. வாழை இலை மொத்த மார்க்கெட்டுக்கு 800-க்கும் மேற்பட்ட வாழை இலை கட்டுகள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமைமுகூர்த்த தினம் என்பதாலும், அடுத்த வாரம் புதன்கிழமை ஓணம் பண்டிகை என்பதாலும் வாழை இலை கட்டு உயர்ந்து கட்டு ஒன்று 3,000ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

சிறிய ரக வாழை இலை 200எண்ணம் கொண்ட ஒரு கட்டு 1,000 முதல் 2,000ரூபாய் வரை விற்பனை ஆனது பெரிய ரக வாழை இலை 200எண்ணம் கொண்ட ஒரு கட்டு 2,000ரூபாய் முதல் 3,000ரூபாய் வரை விற்பனை ஆனது.
இதனால் வாழை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *