August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடி கல்லூரியில் பட்டமளிப்பு விழா- மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

1 min read

Graduation Ceremony at Puliyangudi College – District Collector Participates

22.8.2026
தென்காசி மாவட்டம், புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் 21 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்

புளியங்குடியில் வீராசாமி செட்டியார் கல்வி குழுமம் சார்பில் பொறியியல் கல்லூரி கடந்த 25 ஆண்டுகளாக திறம்பட இயங்கி வருகிறது இந்த கல்லூரியில் 21 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாகல்லூரி கலைஅரங்கில் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி கலை அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி தாளாளர் டாக்டர் முருகையா தலைமை வகித்தார் கல்லூரி செயல் இயக்குனர் விக்னேஷ் வீராசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார்.. இதில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங், சோகோ நிறுவனத்தின் தலைமை பொறியாளர் தேவசகாயம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து தேர்ச்சி பெற்ற சுமார் 400 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பட்ட சான்றிதழ் களை வழங்கினர். விழாவில் எஸ்விசி கல்வி குழும மேலாளர் தங்கப்பன் பிள்ளை, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இசக்கி முத்து அனைத்து கல்லூரி, பள்ளி முதல்வர்கள் அனைத்து துறை தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் நகரின் முக்கியபிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *