August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை அருகே மலைப்பயிர் கள் துறையின் அதிகாரிகள் ஆய்வு

1 min read

Hill Crop Department officials conduct an inspection near Sengottai.

22.8.2026
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு கிராமத்தில் பணி நிறைவு பெற்ற வேளாண் துறை அலுவலர் ஷேக் முகைதீன் நடத்தி வரும் ஒருங்கிணைந்த ஆர்கானிக் வேளாண் பண்ணையில் கடையநல்லூர் மற்றும் செங்கோட்டை வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்களின் துறை உதவி இயக்குனர் சுபாஷினி செங்கோட்டை வட்டார தோட்டக்கலை அலுவலர் சீனத் பேகம் அவர்களும் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு பணிமேற்கொண்டனர்..

இந்த ஆய்வின் போது இந்த எஸ் எஸ் கார்டன் ஆர்கானிக் பண்ணை சிறந்த பழத்தோட்டமாக அமைந்து வருகிறது. தோட்டக்கலை பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் மாணவர்கள் இந்த இந்த பண்ணையை பார்வையிடலாம் என கருத்து தெரிவித்தார்கள்.

முன்னதாக பார்வையிட வருகை தந்த தோட்டக்கலை உதவி இயக்குனருக்கு பண்ணையின் நிர்வாக இயக்குனர் ஷேக் முகைதீன் மூலிகை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *