வெங்காடம்பட்டி பள்ளி மாணவிக்கு பாராட்டு
1 min read
Appreciation for Vengadampatti school student
23.8.2026
தென்காசி மாவட்டம் கடையம் – பாவூர்சத்திரம் அருகிலுள்ள பாரம்பரியமிக்க கிராமம் வெங்காடம் பட்டி. மக்கள் சேவை, சமையல்கலை, சிலம்பக் கலை, இரத்ததானம், விதைப்பந்து வீச்சு என திகழும் கிராமம். இந்த கிராமத்தின் நேர்மையை ஒரு பெண் குழந்தை உயர்த்திப் பிடித்துள்ளார்.
அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் தீபிகா. பெற்றோர் திரவியக்கனி- ஜெயந்தி. வெங்காடம்பட்டி சுடலை மாடன் கோவில் திருவிழாவில் பல ஆயிரம் பேர் கூடிய கூட்டத்தில் ஒரு தங்கக் கம்மலை தீபிகா கண்டெடுக்கிறாள். தங்கம் விற்கும் விலையில் அவள் அதனை தனதாக்கிக் கொள்ள துளியும் விரும்பவில்லை. எடுத்தவுடன் நேர்மையாக அங்கிருந்த பெரியவர்களிடம் கேட்டு தொலைத்தவரிடம் ஒப்படைக்கிறாள்.
தீபிகாவின் சத்திய வாழ்வை பாராட்டி வெங்காடம்பட்டி டிரஸ்ட் பூ. திருமாறன் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். காந்திய நூல்கள் வழங்கப்பட்டன. “டிரஸ்ட் – இந்தியா” பள்ளி முதல்வர் சாந்தி திருமாறன் ஆசிரியைகள் சாந்தி, பவித்ரா நேர்மையின் கTட்சியாய் திகழும் தீபிகாவை பாராட்டினர். மகாத்மா காந்தி கேடயம் மாணவிக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தீபிகாவின் தந்தை திரவியக்கனி, ரா..பாலமுருகன் கலந்து கொண்டனர். தங்க கம்மல் தொலைத்த சிறுமி துர்காவின் தந்தை ராஜசேகர் தீபிகாவுக்கு நன்றி தெரிவித்தார். உண்மை உறங்கவில்லை, நேர்மை சாகவில்லை என்பதற்கு இந்த சிறுமியின் அருஞ்செயலே சாட்சி என திருமாறன் தெரிவித்தார். கணிதம், அறிவியல், கணிப்பொறி, ஆங்கிலம் என பல பாடங்களை கற்கும் இடமாக இருக்கும் பள்ளிக்கூடங்கள் இதுபோன்ற நற்பண்புகளை மெருகேற்றும் ஒழுக்கக் கூடங்களாக மாறிவிட்டால் ஏது குற்றம்? ஏது குறை?! காந்தியம் வெல்லட்டும்!