August 23, 2026

Seithi Saral

Tamil News Channel

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய தென்காசி ஆட்சியரிடம் மனு

1 min read

Petition submitted to Tenkasi District Collector seeking full waiver of agricultural loans.

23.8.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்கிடம் மனு ஒன்றை அளித்தனர் விவசாயிகள். அந்த மனுவில் தமிழக அரசு தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதாக அறிவித்துள்ளது

விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல்கோடிகணக்கில் மக்கள் வரிப்பணம் செலவு செய்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார். பராமரிப்பு செலவு, உதவியாளர் சம்பளம், ஓட்டுனர் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த செயல் முற்றிலும் கண்டத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தற்போதைய முதலமைச்சர் அறிவித்திருந்தார். வெற்றி பெற்று ஆட்சி அமைந்த உடன் விவசாய கடன்களை சதவீத அடிப்படையில் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். எனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் பணத்தில், விவசாயிகளுக்கு பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த துண்டு பிரசுரங்களுடன் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து நீர்வள சங்க ஒருங்கிணைப்பாளரும், தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணை செயலாளர் டேனி அருள்சிங் கூறும் போது ஆட்சிக்கு வரும் முன் ஒரு நிலைப்பாடு ஆட்சி அமைந்தவுடன் ஒரு நிலைப்பாடு என இரட்டை நிலைப்பாடு கொண்டு செயல்படும் அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன் 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்க மட்டும் 79 கோடியே 56 லட்சம் செலவாகிறது. 5 வருடத்திற்கான பயணசெலவு உதவியாளர், ஓட்டுனர் சம்பளம் என 140 கோடியே 40 லட்சம் செலவாகிறது. மொத்தம் ரூ 219 கோடியே 96 லட்சம் செலவு செய்து சட்டமன்ற உறுப்பினர்களை குளிர்விக்க முதலமைச்சர் செய்த அறிவிப்பு விவசாயிகள் வயிற்றில் அடிப்பது போல உள்ளது.

எனவே தேர்தலுக்கு முன் அறிவித்த அறிவிப்பு படி பயிர்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளின் அடுத்தகட்ட போராட்டத்தை இந்த அரசு சந்திக்க வேண்டி வரும் என்று தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *