கடையம் நித்யகல்யாணி அம்மன் கோயவிலில் தெப்ப உற்சவம்
1 min read
Float Festival at Kadayam Nithyakalyani Amman Temple
23.8.2026
தென்காசி மாவட்டம் கடையத்தில் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாதா் கோயிலில் ஆவணி மூல தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, நேற்று காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி-அம்பாள் தெப்பத்துக்கு எழுந்தருளி, தேவாரம், திருவாசகம், வேதங்கள் முழங்க தெப்பத்தில் 11 சுற்றுகள் வலம் வந்தது.
கடையத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் கேசவராஜன், மற்றும் அப்பா் உழவாரப் பணிக் குழுவினா் செய்திருந்தனா்.