August 23, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநாடு

1 min read

Tamil Nadu Rural Development Department Officials’ Association Conference in Tenkasi

23.8.2026
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாடு நிகழ்ச்சிக்கு
மாநாட்டிற்கு தென்காசி மாவட்ட தலைவர் இராமநாதன் தலைமை வகித்தார். தணிக்கையாளர் முத்துக்குமார் அஞ்சலி தீர்மானம் வசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் வரவேற்றார். முன்னாள் மாநில துணைத்தலைவர் வி.சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் மா.மாணிக்கவாசகம் வேலை அறிக்கை வாசித்தார்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் பார்த்தசாரதி, சந்திரசேகரன்
முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், பழனி, பொது சுகாதார அலுவலர் சங்கம் மாநில தலைவர் கெங்காதரன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் கோவில் பிச்சை வாழ்த்தி பேசினர். மாநில பொது செயலாளர் ராஜசேகரன் சிறப்புரையாற்றினார். மாநில தலைவர் ரமேஷ் நிறைவு ரையாற்றினார்.

துணை தலைவர்கள் பழனி, மாடசாமி, சீனிவாசன், மாவட்ட இணை செயலாளர்கள் சிக்கந்தர் பாவா, ஆறுமுகம், சுப்புராஜ், மகளிர் குழு அமைப்பாளர் ஜெயலட்சுமி, பிரச்சார குழு அமைப்பாளர் கள் செல்வம், முத்துப்பாண்டி, கண்ணன், ஆவுடைக் கண்ணு கலந்து கொண்டனர். தணிக்கையாளர் ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ஆட்சிப் பணி ஒதுக்கீட்டினை ஏற்றத்தாழ்வு இல்லாமல் நியாயமான முறையில் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களை அரசு ஊழியராக வகைப்படுத்த வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை உதவி இயக்குனர் நிலைக்கு உயர்த்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய ஒன்றியங்களை ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு மாவட்ட அளவில் நிரந்தர வட்டார அலுவலர் பணியிடம் மற்றும் வட்டார அளவில் நிரந்தரமாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தலைமை இடத்தில் புதிய மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்.

உள்ளாட்சி தணிக்கையில் பழைய நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். விபிஜி, ராம்ஜி திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்கப்பட வேண்டும். 16 வது மத்திய நிதி குழு மானியம் மற்றும் ஜல்ஜீவன் மிஷன் 2.0 உரிய பணியிடம் வழங்க வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *