திருந்திபுரம் கோவிலில் திருநங்கையை கரம் பிடித்த கோயில் அர்ச்சகர்
1 min read
Temple priest marries a transgender woman at Thirunthipuram temple.
23.8.2026
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமிகள் சன்னதியில்
கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி-லதா தம்பதியின் மகள் நாட்டுப்புற கலைஞர் திருநங்கை சஞ்சனா , புதுப்பாளையம் பகுதி சேர்ந்த குமரன்-சாந்தி தம்பதியின் மகன் கோயில் அர்ச்சகர் நாகராஜன். சஞ்சனாவும் நாகராஜனும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் இன்று திருவந்திபுரம் சன்னதியில் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். ஆறு ஆண்டுகளாக நாட்டுப்புற கலைஞர் திருநங்கை மற்றும் கோயில் அர்ச்சகர் இருவரும் காதலித்து வந்த நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருவந்திபுரம் கோயிலில் 80 க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது. கோயிலுக்கு வந்திருந்த அனைவரும் திருநங்கையை கரம் பிடித்த இளைஞருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
80 க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு திருமணம் நடந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்பட்டது.