August 26, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் அருகே விபத்து: காரில் சென்ற 2 பேர் பலி- வேனில் பயணித்த 11 பேர் காயம்.

1 min read

Accident near Sankarankovil: Two people in a car killed; 11 traveling in a van injured.

26.8.2026
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கார் மீது வேன் மோதி விபத்து. காரில் சென்ற இருவர் உயிரிழப்பு. வேனில் பயணித்த 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கிருஷ்ணன் என்பவர் குடும்பத்தினர் 20 பேருடன் வேனில் சங்கரன்கோவில் அருகே மலையாங்குளம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இராமநாதபுரம் அருகே உள்ள தங்கச்சிமடம் பகுதியில் இருந்து 3 பேர் குற்றாலத்திற்கு தார் காரில் சென்று கொண்டிருந்தனர்.

சங்கரன்கோவில் அருகே கழுகுமலை சாலையில் வேணும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில். காரில் பயணம் செய்த மருது மற்றும் இளையராஜா இருவரும் உயிரிழந்தனர். மேலும் உதயசங்கர் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *