பாவூர்சத்திரம் அரிமா சங்கம் சார்பில் அன்னை தெரசா விழா
1 min read
Mother Teresa Celebration Organized by Pavoorchatram Lions Club
26.8.2026
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக தென்காசி அருகில் உள்ள அழகப்பபுரத்தில் விஷ்வா ரக்ஷா முதியோர் இல்லத்தில் அன்னை தெரசா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்நிகழ்விற்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் நிர்வாகி முனைவர் த.அருணாச்சலம் தலைமை தாங்கினார். செயலாளர் ஆசிரியர் பி. திருமலைக் கொழுந்து முன்னிலை வகித்தார்கள். முதியோர் இல்ல காப்பாளர் முதியோர் நல மருத்துவர் சுகன்யா அனைவரையும் வரவேற்று பொன்னாடை போர்த்தினார்கள்.
கே.ஆர்.பி. மண்டல தலைவர் லயன். கே.ஆர்.பி. இளங்கோ முதியவர்களுக்கு மதிய உணவை துவக்கி வைத்தார்கள். பொருளாளர்
எம்.. குமரகுருபரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.