August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் 1-ந் தேதி செல்போன்னுக்கு தடை

1 min read

Ban on mobile phones at Panpozhi Thirumalai Kumara Swamy Temple on the 1st.

26.8.2026
தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலைக்குமாரசுவாமி கோவிலில், பக்தர்களின் வசதியையும் கோயிலின் புனிதத்தன்மையையும் கருத்தில் கொண்டு கைப்பேசி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் கைப்பேசியை கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைப்பேசிகளை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைத்து, அதற்கான ரசீதை பெற்றுக்கொண்டு சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலில் கைப்பேசியை பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் கவனச்சிதறலை குறைத்து அமைதியான முறையில் வழிபாடு மேற்கொள்ளும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அறையில் கைப்பேசியை ஒப்படைத்த பின்னர் பக்தர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்ததும் ரசீதை காண்பித்து கைப்பேசியை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கைப்பேசியை கோயிலுக்குள் கொண்டு வராமல், பாதுகாப்பு அறையில் ஒப்படைத்து ஒத்துழைக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோயிலின் வழிபாட்டு ஒழுங்கு மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதால், பக்தர்கள் முன்கூட்டியே இசெப்டம்பர் 1 முதல் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலில் கைப்பேசிக்கு தடை. விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அனைவரும் கோவில் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட அன்புடன் வேண்டுகிறோம்.

மேலும், கோயிலில் கைப்பேசியை பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் கவனச்சிதறலை குறைத்து அமைதியான முறையில் வழிபாடு மேற்கொள்ளும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அறையில் கைப்பேசியை ஒப்படைத்த பின்னர் பக்தர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்ததும் ரசீதை காண்பித்து கைப்பேசியை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திருமலைக்குமார சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கைப்பேசியை கோயிலுக்குள் கொண்டு வராமல், பாதுகாப்பு அறையில் ஒப்படைத்து ஒத்துழைக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோயிலின் வழிபாட்டு ஒழுங்கு மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதால், பக்தர்கள் முன்கூட்டியே இதனை அறிந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
இதனை அறிந்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *