தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விதிமுறைகள் அறிவிப்பு
1 min read
Guidelines announced for the Vinayagar Chaturthi festival in Tenkasi district.
28.8.2026
தென்காசி மாவட்டத்தில் விநாயகர் கதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், தெரிவித்துள்ளார்.
மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச் சூழலின் அழகையும் துய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும்.
மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயக சதுர்த்தி விழாவினை கொண்டாடும்படி பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், கேட்டுக்கொண்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவில்
செய்யவேண்டியவை
சுற்றுச்சூழலுக்கு உகந்த
விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள்.
வினாயகர் சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும், நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள்.
சுற்றுச்சூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும்.
புதிய துணிகளை துவைத்து மீண்டும் உபயோகிக்கக் கூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும்.
பிரசாத விநியோகத்திற்கு மக்கும்/மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும். பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள்.
அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். எல்.இ.டி பல்புகள் போன்ற சுற்றுச்சூழலிற்கு -உகந்த விளக்குகளை பயன்படுத்தவும்.அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும்
விநாயகர் சதூர்த்தி விழாவில்
செய்யக்கூடாதவை
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த கூடாது. சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயணப் பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது.
மேல்பூச்சிற்கும் சிலைகளின் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற இரசாயன
சாயங்கள்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த கூடாது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது.
வண்ணப்பூச்சுக்கள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட ஒருமுறையே உபயோகித்து தூக்கியெறியக்கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது.
பண்டிகையின் போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது.
அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது.
ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது. ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.