தென்காசி மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் தேர்வு- ஆட்சியர் தகவல்
1 min read
Tenkasi District-Level Resource Trainer Selection – Collector’s Announcement
28.8.2026
தென்காசி மாவட்டம் முதுகலைப்பட்டதாரிகளிடம்இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம் மூலம் மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் (DRP) தேர்வு செய்வதற்கு கீழ்க்காணும் தகுதிகளை உடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களிடமிருந்து
வயது தகுதி:30 வயது முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டப்படிப்பு (Regular) முடித்திருக்க வேண்டும். மொழி: தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க நல்ல புலமை பெற்றிருக்க
வேண்டும்.
பணி அனுபவம், கூட்டமைப்புகள், பயிற்றுநர் என்ஜிஓ துறை அல்லது பிற அரசு துறை திட்டங்களில் குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பாக, கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பணியாற்றிய அனுபவமும், பல்வேறு முக்கிய பங்குதாரர்களுக்கு பயிற்சி வழங்கிய அனுபவமும் இருக்க வேண்டும். மேலும், கணினியை திறம்பட பயன்படுத்தும் நடைமுறை அறிவும், ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகளை கையாளும் திறனும் பெற்றிருக்க வேண்டும்
இப்பணி முற்றிலும் தற்காலிகமானது
மேலும், கீழ்க்காணும் முகவரிக்கும் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கும் 04.09.2026 ஆம் தேதி பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.