பாளை சாந்தி நகர் கிரைஸ்ட் சர்ச் பள்ளியில் விதைப்பந்து பிரச்சாரம்
1 min read
Seed ball campaign at Christ Church School, Shanthi Nagar, Palayamkottai.
30.8.2026
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் “கிரைஸ்ட் சர்ச்” நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியில் விதைப்பந்து பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ரோசலின் சாந்தி தலைமை தாங்கினார். ஆசிரியைகள் வள்ளி சங்கரி, அன்னபூரணம், புனிதா, அமுதா, டெய்சி ராணி, எஸ்தர் மரிய சோபி முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஷெரன் ஞான சுஜி வரவேற்றார். விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் கிரைஸ்ட் சர்ச் பள்ளி குழந்தைகளுக்கு விதைப்பந்து பற்றி விவரித்தார். மிக எளிதாகக் கிடைக்கும் வேப்பமுத்துக் களை சேகரித்து விதைப்பந்துகள் செய்யலாம் என தெரிவித்தார்.
தலைக்கு 25 விதைப்பந்துகளை வீட்டிலிருந்து பள்ளிக்குச் செய்து கொண்டு வந்து பாராட்டு சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இறுதியில் ஆசிரியை எஸ்தர் ராஜாத்தி நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ரெவரெண்ட் ஜெயகுமார் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் அம்பை காந்தி, ஹரி பிரியாணி ஹரிஹரன் செல்வன் கலந்து கொண்டனர். விழா நிறைவில் மா மரக்கன்றினை பள்ளி சார்பில் மாணவர் புது பெருமாள் மாணவி தங்க துர்கா நடவு செய்தனர்.