August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரத்தில் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி

1 min read


Skating Championship Competition in Pavoorchatram

30.8.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள ஜிசா அரினா மைதானத்தில் இன்று நடத்தப்பட்ட ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியை
த. வெ. க தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் தொடங்கி வைத்தார்.இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் தங்கராஜ், டாக்டர் ராவின்,
டாக்டர் ஆறுமுகம், டாக்டர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
கே.நாராயண சிங்கம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யபட்டுள்ளனர்.

இந்த போட்டி நமது தென்காசி மாவட்ட செயலாளர் தலைமை பயிற்சியாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. ஜிசா சேர்மன் ச. புஷ்பா சக்திவேல் மற்றும் பயிற்சியாளர்கள் சக்தி, எஸ். பி.செல்வம் ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *