August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் நாற்றங்கால் அமைக்கலாம்

1 min read

Tenkasi: Nurseries can be established under the agroforestry scheme.

30.8.2026
தென்காசிமாவட்டத்தில் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் அளவில் பெரிய நாற்றங்கால் அமைத்திட ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கனகம்மாள் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கனகம்மாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதோடு சுற்றுச் சூழலை பாதுகாத்து பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் வேளாண் காடுகள் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பெரிய நாற்றங்கால் (ஒரு ஹெக்டேர்) அமைத்திட மானியமானது மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது ரூபாய் 8.00 இலட்சம் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு ஹெக்டேர் அளவில் நாற்றங்கால் அமைப்பதற்கு 400 சதுர மீட்டர் நிழல்வலை 125 ச.மீ மிஸ்ட் சேம்பர், தாய் பாத்தி தயாரித்தல் தெளிப்பான், பாசன அமைப்பு மற்றும் நாற்றங்கால் பகுதியை சுற்றி கம்பி வலை மூலம் வேலி அமைத்தல் (200 ச.மீ) ஆகிய மொத்த பணிக்கான செலவு ரூபாய் 16,00 இலட்சம் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் நாற்றங்கால் அமைத்திட ஆர்வமுள்ள விவசாயிகள் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் அல்லது தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கனகம்மாள் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *