August 31, 2026

Seithi Saral

Tamil News Channel

மோசமான வானிலையால் அந்தமான் சென்ற விமானம் சென்னைக்கு திரும்பியது

1 min read

A flight bound for the Andaman Islands returned to Chennai due to bad weather.

31.8.2026
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஆகாசா ஏர்லைன்ஸ் தனியார் விமானம் நேற்று காலை 176 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. அந்தமான் வான் எல்லையை நெருங்கிய போது அங்கு கடுமையான சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நில வியதாக கூறப்படுகிறது.இதனால் விமானம் அந்தமானில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேர மாக வானில் வட்டமடித்தபடி பறந்து கொண்டிருந்தது. நீண்ட நேரம் ஆகியும் வானிலை சீரடையாததால், மீண்டும் சென்னை விமான நிலையத்துக்கே திரும்பி வந்து தரை இறங்கியது.

அந்தமானில் வானிலை சீரடைந்ததும் விமானம் மீண்டும் புறப்பட்டுச் செல்லும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் வானிலை தொடர்ந்து சீரடையாததால் அந்தமான் செல்லும் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 176 பயணிகளும் இன்று (திங்கட்கிழமை) காலை 9.10 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அந்தமான் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவில் தங்குவதற்கு இடவசதி மற்றும் உணவு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் பயணிகளுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 31 பயணிகள் தாங்கள் வீடுகளுக்குச் சென்று விட்டு, காலையில் விமான நிலையத் துக்கு வருவதாக கூறிவிட்டு சென்றனர்.மீதமுள்ள 145 பயணிகள் சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல் களில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *