ஜிம்பாப்வேயில் லாரி-மினிபஸ் மோதிய விபத்தில் 27 பாதிரியார்கள் சாவு
1 min read
27 priests killed in lorry-minibus collision in Zimbabwe.
31.8.2026
மத்திய ஜிம்பாப்வேயின் ஹராரேவுக்கு தெற்கே 132 கி.மீ. தொலைவில் உள்ள சிவு அருகே நெடுஞ்சாலையில் மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் அந்த நாட்டின் இயேசு சபை துறவிகளான பாதிரியார்கள் மற்றும் இளம் பாதிரியார்கள் என மொத்தம் 34 பேர் சென்றனர்.
தேமாவில் இருந்து மவுமாவில் நடந்து வரும் தேவாலய கூட்டத்துக்கு இவர்கள் சென்றனர். நள்ளிரவில் வெளிநாட்டு பதிவெண் கொண்ட கனரக லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த அந்த பஸ்சை முந்தி செல்ல முயன்றது. அப்போது அந்த பஸ் மீது லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் அந்த பஸ் தீப்பிடித்து கருகி எரிந்து சாம்பலானது. இந்த கோர விபத்தில் 27 பாதிரியார்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.