சங்கரன்கோவில் அருகே நெசவு தொழிலாளி ரெயில் மோதி பலி
1 min read
Weaving worker killed after being hit by a train near Sankarankovil
1.9.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சென்னிகுளம் ரயில்வே கேட்ட அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது செங்கோட்டை தாம்பரம் ரயில் மோதி ஒருவர் பலியானார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் வேதநாயகம் மகன் செல்வக்குமாரசாமி (வயது 43). நெசவுத் தொழிலாளி. நெசவுத் தொழிலாளி. நேற்று மாலை செல்வ குமாரசாமி சென்னிகுளம் இரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது செங்கோட்டையில் இருந்து தாம்பரம் சென்ற இரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து
செல்வ குமாரசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் அடிபட்டு இறந்த செல்வ குமாரசாமிக்கு ஜோதி முத்து என்ற மனைவியும், அஜய் சூர்யா (வயது 16) என்ற மகனும் அஜிதா (வயது 13) என்ற மகளும் உள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.