September 1, 2026

Seithi Saral

Tamil News Channel

முன்னாள் காதலன் செயலால் திருமணம் நின்றது- மணப்பெண் தற்கொலை

1 min read

Wedding called off due to ex-boyfriend’s actions; bride commits suicide.

1.9.2026
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மூப்பன்வலசையைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகள் சரிதா, (வயது 25) பிஎஸ்சி பட்டதாரி. இவரும் சாயல்குடி அருகே எஸ். மாரியூரில் வசிக்கும் இருமேனி மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் லோகேஸ்வரனும் (27), கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், ஏர்வாடியைச் சேர்ந்த சதீஸ்குமார் (27), சரிதா இடையே காதல் மலர்ந்தது. இருவருக்கும் கடந்த 30-ந் தேதி திருமண ஏற்பாடு நடந்தன.
இது பற்றி அறிந்த லோகேஸ்வரன், சரிதாவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சதீஸ்குமாரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பினார். இதனை தொடர்ந்து சரிதா, சதீஸ்குமார் திருமணம் நிறுத்தப்பட்டது.
இதனால் மனமுடைந்த சரிதா வீட்டில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் படி உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சரிதா, சதீஷ்குமார் திருமணம் நிச்சயம் பற்றி அறிந்த லோகேஸ்வரன், சரிதாவை காதலிக்கும் போது இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து விடுவேன் என மிரட்டி வந்தார். இது தொடர்பாக சரிதா புகாரின் பேரில் லோகேஸ்வரன் மீது உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *