September 3, 2026

Seithi Saral

Tamil News Channel

சட்டசபையில் திங்கட்கிழமை முதல்வர் விஜய்யின் பதிலுரை

1 min read

Chief Minister Vijay’s reply in the Legislative Assembly on Monday.

3.9.2026
சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. அடுத்து வரும் திங்கட்கிழமை (7-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் பதிலுரையுடன் சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.

தமிழக சட்டசபையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை குறித்து பேசியதால், அவையில் அனல் பறந்தது.

இந்த நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை நாளாகும். தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றும் சட்டசபைக்கு விடுமுறை. இவ்வாறு 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்படுகிறது. அடுத்து, வரும் திங்கட்கிழமை (7-ந் தேதி) சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.

அன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதில் அளிக்க இருக்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *