September 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கோவிந்தப்பேரி பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டம் துவக்கம்

1 min read

Breakfast expansion scheme launched at Govindapperi School.

12.9.2026
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தபேரி ஞான மறவா நடுநிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கின்ற 96 மாணவர்களுக்கு பொங்கல் சாம்பார் மற்றும் கேசரியுடன் கூடிய காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஞானம் மறவா நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீபன் ராஜ் தலைமை தாங்கினார். கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவரும் தமிழக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவருமான டி.கே. பாண்டியன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊர்ப் பெரியவர் ராமசாமி தேவர், ஊராட்சி உதவியாளர் மாரித்துரை வனத்துறை ஓய்வு பெற்ற அதிகாரி மாணிக்கம் சுடலைக்கண்ணு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *