கடையநல்லூரில் பெண் போலீசை தாக்கிய தலைமைக் காவலர் கைது
1 min read
Head constable arrested for assaulting female police officer in Kadayanallur
12.9.2026
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பெண் காவலரை தாக்கியதலைமை காவலரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை தென்காசி மாவட்ட எஸ்பி அசோக்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டியை அடுத்த குருக்கள்நாடார்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் பொன்ராஜ் (வயது 40). இவர்கடையநல்லூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணி
புரிந்து வருகிறார். இந்நிலை யில் சம்பவத்தன்று அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் மீனா என்பவருடன் பொன்ராஜ்க்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் மீண்டும் அங்குள்ள காவலர் குடியிருப்பு அருகே வைத்து 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பொன்ராஜ், பெண் என்றும் பாராமல் மீனாவை தாக்கி அவதூறாக பேசியுள் ளார். இதுகுறித்து பெண்
போலீசான மீனா, உடனடி யாக கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விசாரணை நடத்தி பெண் வன்கொடுமை தடுப் புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பொன்ராஜை கைது செய்தார். தொடர்ந்துஅவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்குள் தகராறு ஏற்பட்டு பெண் போலீசை தலைமை காவலர் தாக்கி கைதான சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே கைது செய்யப்பட்ட தலைமை காவலர் பொன்ராஜை தென்காசி மாவட்ட எஸ்பி அசோக்குமார் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பொன்ராஜ் எதற்காக மீனாவை தாக்கினார்? தனிப்பட்ட விரோதமா? அல்லது பணி செய்யும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதமா? என்பது குறித்து விசாரித்து வருகின் றனர். இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.