தோரணமலையில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கான இலவசமாக பயிற்சி- அண்ணமலை ஐஏஎஸ் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
1 min read
Free online job training at Thoranamalai – Memorandum of Understanding signed with Annamalai IAS Academy.
11.9.2026
தோரணமலையில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கான இலவசமாக பயிற்சி அளிக்க அண்ணமலை ஐஏஎஸ் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தோரணமலையில் ஆன்மிகப்பணியோடு அறப்பணிகளும் செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி முகாம நடத்தப்படுகிறது.அந்த வகையில் இன்று ( 13-ந் தேதி) தோரணமலை முருகன் கோவில் நிர்வாகம், டாக்டர் பி.அண்ணாமலை ஐ.ஏ.எஸ். அகாடமியும் இணைந்து குருப்-2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நடந்தது.
முகாமுக்கு வந்தவர்களுக்கு அண்ணாமலை அகாடமியின் முரளி பயிற்சி அளித்தார். போட்டித் தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்ற விளக்கமாக பேசினார்.
மேலும் தோரணமலையில் தங்கி இருந்து படித்து போட்டிதத் தேர்வில் வெற்றிபெற்றவர்களும் பேசினர்கள்.
தோரணமலையில் நூல்நிலையம் உள்ளது. அதன்மூலம் வேலைவாய்ப்பு பெற மாணவ-மாணவிகள் படித்து வருகிறளார்கள். மாணவர்கள் சிலர் அங்கே தங்கி படித்து வருகிறார்கள். அந்த நூல் நிலையத்திற்கு போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை அண்ணாமலை அகாடமி சார்பில் வழங்கப்பட்டது. அதேபோல் தோரணமலை பக்தர்கள் மூலமும் வேலைவாய்ப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டது. தோரணமலையில் இன்று திருமணம் செய்த புதுமண தம்பதியினர் அந்த புத்தகங்களை வழங்கினார்கள்.
தோரணமலைக்கு வர இயலாதவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி எடுக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. அண்ணமலை ஐஏஎஸ் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் சினிமா இயக்குனர், நடிகர் பாரதிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏப்பாடுகளை தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.