சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அறை
1 min read
Security room at Sankarankovil Government Hospital
13.9.2026
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் குழந்தையின் பிறப்பை கொண்டாடும் வகையிலும் தாயின் இன்பத்தையும் முக்கியத்துவத்தையும் போற்றும் வகையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்கம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை தென்காசி மாவட்ட கணிப்பாய்வு அலுவலர், நிதித்துறை சிறப்புச் செயலாளர் லலிதா சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பார்வையிட்டார். மேலும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தினையும், சங்கரன்கோவில் நகராட்சி காவிரி நகரில் இயங்கும் நகராட்சி பள்ளிகளுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கான ஒருங்கிணைந்த சமையல் கூடம், மேலநீலிதநல்லூர் ஒன்றியம் வடக்கு பனவடலி ஊராட்சி திருமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள காலை உணவு தயாரிக்கும் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது தென்காசி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் உடன் இருந்தார்.