September 15, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 55 செவிலியர் பணியிடங்கள்-ஒப்பந்த அடிப்படையில் தேர்வு

1 min read

55 Nursing Posts in Tenkasi District-Selection on Contract Basis

14/9/2026
தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 55 செவிலியர் பணியிடங் களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் தென்காசி சுகாதார மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 55 செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கல்வித்தகுதியினை பெற்றிருக்க வேண்டும்.

  1. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லூரியில் (இந்திய செவிலியர் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டது) செவிலியர் பட்டயபடிப்பு (GNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) பெற்றிருக்க வேண்டும்.
  2. தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு புதுப்பித்திருத்தல் கட்டாயம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள், தென்காசி மாவட்ட வலைதளம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 26.09.2026 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/தபால் மூலமாகவோ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம். இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், இலத்தூர் – 627 803 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்,தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *