September 15, 2026

Seithi Saral

Tamil News Channel

அம்பாசமுத்திரம் அருகே பொது மக்களை அச்சுறுத்தும் கரடி!

1 min read

Bear terrorizes the public near Ambasamudram!

15/9/2026
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் அனவன் குடி யிருப்பு பகுதியில் கரடி நடமாட்டம் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நேற்று காலை கரடி தாக்கியதில் ஒருவர் காயமடைந்த சம் பவத்தைத் தொடர்ந்து வனத்துறையினர் கண்கா ணிப்பு மற்றும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் குடி யிருப்பு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கரடி சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை அப்பகுதியில் குளிக்கச் சென்ற கூலி தொழிலாளி கணேசமூர்த்தி என்பவரை கரடி தாக்கியதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மனிதரை தாக்கிய கரடியை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். கரடி நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் இரண்டு கூண்டுகள் அமைக்கப்பட்டு, கரடியை பாதுகாப்பாக பிடிப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

மேலும், அனவன் குடியிருப்பைச் சுற்றியுள்ள மலைப்பாங்கான பகுதிகள், புதர்கள் மற்றும் கரடி பதுங்கக்கூடிய இடங்களில் வனத்துறையினர் தனித்தனி குழுக்களாக பிரிந்து தேடுதல் மேற் கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் டார்ச் லைட் உள்ளிட்ட உபகரணங்களின் உதவியுடன் வனத்துறையினர் ரோந்து சென்று கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்ற னர்.

கரடி மீண்டும் குடியி ருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை தாக்குவதைத் தடுக் கும்வகையில்,
முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதை தவிர்க்கவும், கரடி தென்பட்டால் அதனை விரட்ட முயற்சிக்காமல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்த ப் பட்டுள்ளனர்.

மனிதரை தாக்கிய கரடி இதுவரை சிக்காத நிலையில், இரண்டு கூண்டுகள் அமை க்கப்பட்டு இரவு நேர ரோந்தும் தீவிரப்படு த்தப்பட்டுள்ளதால், கரடி விரைவில் சிக்குமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *